திருநாவலூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 153 கி.மீ., பண்ருட்டியிலிருந்து மேற்கே உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் 15 கி.மீ.ல் கோயில். திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்திலிருந்து வருபவர்கள் கெடிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள பண்ருட்டி சாலையில் 2 கி.மீ. சென்றால் கோயில்.சென்னையிலிருந்து 195 கி.மீ. திருச்சியிலிருந்து 172 கி.மீ. மதுரையிலிருந்து 332 கி.மீ.
வரிசை எண் : 40
சிறப்பு : சுந்தரர், சடையனார், மற்றும் இசைஞானியார் அவதாரத் தலம். கோயிலின் உள்ளே இடப்பக்கத்தில் உள்ள சந்நிதியில் சுந்தரர் தன் இரு மனைவியருடனும் வெள்ளயானையுடனும் நிற்கும் காட்சி.
இறைவன் : பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்
இறைவி : மனோன்மணி. சுந்தராம்பிகை
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் & அஞ்சல் – 607 204, உளுந்தூர் பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.30 – 08.30 தொடர்புக்கு : 9443382945

இருப்பிட வரைபடம்


தன்மையினால் அடியேனைத்  தாம்   ஆட்கொண்ட  நாள் சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்    என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து    என்னைப் போகம்புணர்த்த
நன்மையினார்க்கு இடம்ஆவது    நம்திரு நாவலூரே.             
							-  சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 தன்மையினால் அடியேனை


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க