திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 177 கி.மீ., விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. கோயில். சென்னையிலிருந்து 220 கி.மீ. திருச்சியிலிருந்து 122 கி.மீ. மதுரையிலிருந்து 248 கி.மீ.
வரிசை எண் : 41
சிறப்பு : ஆழத்து விநாயகர், 28 ஆகம சிவலிங்கங்கள், குருநமச்சிவாயருக்கு காட்சி கொடுத்த இளமைநாயகி சந்நிதிகள். அருகே மணிமுத்தாறு நதி. இந்த நதியில்தான் சுந்தரர் பொன்னை இட்டு அதனைத் திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் எடுத்தாக வரலாறு.
இறைவன் : விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்
இறைவி : விருத்தாம்பிகை, பெரியநயகி, பாலாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : மணிமுத்தாறு
பாடல் : சுந்தரர், சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. பழமலைநாதர் திருக்கோயில், விருத்தாசலம் & அஞ்சல் – 606 001, விழுப்புரம் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00 தொடர்புக்கு : 04143 230203, 9865021498.

இருப்பிட வரைபடம்


பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள்  தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்  அடியேன் இட்டளங்கெடவே.
				-  சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 பொன்செய்த மேனியினீர்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க