திருமுண்டீச்சரம் (கிராமம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 135 கி.மீ., அரசூரிலிருந்து 3 கி.மீ., திருவெண்ணை நல்லூரிலிருந்து 5 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ., பண்ருட்டியிலிருந்து 17 கி.மீ., சென்னையிலிருந்து 175 கி.மீ. திருச்சியிலிருந்து 135 கி.மீ. மதுரையிலிருந்து 285 கி.மீ.
வரிசை எண் : 51
சிறப்பு : சொக்கலிங்கன் என்னும் மன்னன் பிரதிட்டை செய்த இலிங்கம்.
இறைவன் : சிவலோகநாதர், முண்டீசர்
இறைவி : செளந்தர்யநாயகி, செல்வநாயகி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : முண்டக தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் & அஞ்சல் – 607 203 (வழி) உளுந்தூர்ப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 10.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 9994190417, 9344668180

இருப்பிட வரைபடம்


கானவன்காண் கானவனாய்ப் பொருதான் தான்காண்
    கனலாடவல்லான்காண் கையிலேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயினான்காண்
    வல்லேறொன் றது ஏற வல்லான் தான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரானான்காண்
    உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க்கென்றும்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே. 
		- அப்பர்
பாடல் கேளுங்கள்
  கானவன்காண்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க