திருஆமாத்தூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 128 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து செல்லும்போது விழுப்புரம் ஊருள் செல்லாமல் காட்பாடி இரயில்வே கேட்டில் பிரிந்து திருவண்ணாமலை சாலையில் 2 கி.மீ. சென்று இடப்பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ. சென்றால் கோயில். சென்னையிலிருந்து 168 கி.மீ. திருச்சியிலிருந்து 158 கி.மீ. மதுரையிலிருந்து 288 கி.மீ.
வரிசை எண் : 53
சிறப்பு : நந்தியும் காமதேனுவும் தவம் செய்து கொம்புகளைப் பெற்றத் தலம்.
இறைவன் : அபிராமேஸ்வரர், அழகியநாதர்
இறைவி : முக்தாம்பிகை, அழகியநாயகி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : ஆம்பலப்பொய்கை
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமாத்தூர் & அஞ்சல் – 605 602 விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 04146-223319

இருப்பிட வரைபடம்


வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
    வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
    கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
    தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
				- அப்பர்
பாடல் கேளுங்கள்
  வண்ணங்கள் தாம்பாடி


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க