திருமாணிகுழி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 156 கி.மீ., பண்ருட்டியிலிருந்து 16 கி.மீ., பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூர் செல்லும் சாலையில் 15 ஆவது கி.மீ.ல் வலப்பக்கம் செல்லும் சாலையில் 1 கி.மீ. (கெடிலநதி பாலத்தைக் கடந்து) சென்றால் கோயில். கடலூரிலிருந்து வருவதானால் கடலூர்-பண்ருட்டி சாலையில் திருவகீந்திரபுரம் வழியாக 10 கி.மீ. வந்து இடப்பக்கம் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் கோயில். சென்னையிலிருந்து 218 கி.மீ. திருச்சியிலிருந்து 146 கி.மீ. மதுரையிலிருந்து 280 கி.மீ.
வரிசை எண் : 49
சிறப்பு : திருமால் பிரம்மச்சாரி வடிவில் இறைவனை வழிபட்ட தலம்.
இறைவன் : வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர்
இறைவி : அம்புஜாட்சி, உதவிநாயகி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : சுவேத தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
குறிப்பு : இத்தலத்திற்கு அடியேன் (இத்தளத்தின் உரிமையாளர்) வந்தபோது வலக்கை மணிக்கட்டில் தாங்க முடியாத வலியோடு வந்தேன். கையைத் தொங்க விட்டு நடக்க முடியவில்லை. உணவருந்த முடியவில்லை. அருச்சனைப் பொருள்கள் கொண்ட பையைக் கூட சுமக்கமுடியவில்லை. கோயில் வந்து இறைவனைத் தரிசித்துவிட்டு இறைவியைத் தரிசனம் செய்யப் போனபோது இரு கைகளையும் தூக்கிக் கும்பிட இயலவில்லை. அந்த அளவிற்குத் தாங்க முடியாத வலி. உன்னைக் கும்பிடக்கூட முடியவில்லையே அம்மா என்று அழுது தொழுதுவிட்டு ஊர் திரும்பினேன். ஊர் வந்து சேர்வதற்குள் கையில் வலி இருந்த சுவடே தெரியவில்லை. அப்பொழுதுதான் அந்த அம்பாளின் திருநாமம் என்னவென்று நினத்துப் பார்த்தேன். அவள் பெயர் உதவிநாயகி. ஆம் எளியேனுக்கும் உதவிய உதவிநாயகி.
முகவரி : அருள்மிகு. வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிகுழி & அஞ்சல் – 607 401 (வழி) திருவகீந்திபுரம் கடலூர் வட்டம் & மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 9942094516, 9362638728, 04142-274485

இருப்பிட வரைபடம்


மந்தமலர்க் கொண்டு வழிபாடு செயு மாணி உயிர் வவ்வமனமாய்
வந்த ஒரு காலனுயிர் மாள உதை செய்த மணிகண்டன் இடமாம்
சந்தினொடு காரகில் சுமந்து தடமாமலர்கள் கொண்டு கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயு மணமாருதவி மாணிகுழியே
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
  மந்தமலர்க் கொண்டு


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க