திருக்கூடலையாற்றூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 180 கி.மீ., விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் சாலையில், ராஜேந்திரபட்டணம் வந்து அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக 15 கி.மீ. வந்தால் இத்தலத்தை அடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து வரும்போது சேத்தியாதோப்பு வந்து அங்கிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 6 கி. மீ. சென்றால் குமாரகுடி வரும். அங்கிருந்து கவாலகுடி சாலையில் 4 கி.மீ. வந்தால் கோயில். சென்னையிலிருந்து 190 கி.மீ. திருச்சியிலிருந்து 110 கி.மீ. மதுரையிலிருந்து 233 கி.மீ.
வரிசை எண் : 35
சிறப்பு : சுந்தரமூர்திநாயனார் முதுகுன்றத்திற்கு (விருத்தாசலம்) வழி கேட்டபோது இறைவன் வழிப்போக்கராக வந்து கூடலையாற்றூரை மறந்தனையோ என்று சொல்லி இத் தலத்திற்கு வழி காட்டியதாக வரலாறு.
இறைவன் : நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்
இறைவி : புரிகுழல்நாயகி
தலமரம் : கல்லால மரம்
தீர்த்தம் : சங்கம தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நெறிகாட்டுநாதர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர், கவாலகுடி அஞ்சல் – 608 702 காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9942249938

இருப்பிட வரைபடம்


வடியுடை மழுவேந்தி    மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப்    புரிகுழ லுமையோடும்
கொடியணி நெடுமாடக்    கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த    அதிசயம் அறியேனே. 
					- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 வடியுடை மழுவேந்தி


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க