திருக்கோவலூர் (திருக்கோயிலூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 160 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 40 கி.மீ. திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ., திருக்கோயிலூர் வந்து கீழையூர் பகுதியில் கோயிலுக்கு வரவேண்டும். மேலையூரில்தான் பேருந்து நிலையமும் திரிவிக்ரமப் பெருமாள் கோயிலும் உள்ளது. சென்னையிலிருந்து 200 கி.மீ. திருச்சியிலிருந்து 190 கி.மீ. மதுரையிலிருந்து 330 கி.மீ.
வரிசை எண் : 43
சிறப்பு : அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. அந்தகாசூரனை அழித்த தலம். மெய்ப்பொருள் நாயனர் அவதாரத்தலம். கபிலர் என்ற புலவர் மறைந்த தலம். ஒளவையரை விநாயகர் தன் தும்பிக்கையால் தூக்கி திருக்கயிலையில் சேர்த்த தலம்.
இறைவன் : வீரட்டேஸ்வரர்
இறைவி : சிவானந்தவல்லி, பெரியநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : தென்பெண்ணையாறு
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழையூர் திருக்கோயிலூர் & அஞ்சல் – 605 757 திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 9344879787, 9486280030, 04153-253532

இருப்பிட வரைபடம்


செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வதென்னே கோவல் வீரட்டனீரே.
				-  அப்பர்
பாடல் கேளுங்கள்
  செத்தையேன் சிதம்பன்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க