திருத்துறையூர் (திருத்தளூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 160 கி.மீ., பண்ருட்டியிலிருந்து புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. சென்று கரும்பூர் சாலையில் 5 கி. மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து 200 கி.மீ. திருச்சியிலிருந்து 150 கி.மீ. மதுரையிலிருந்து 280 கி.மீ.
வரிசை எண் : 47
சிறப்பு : சுந்தரர் தவநெறி வேண்டிப் பெற்றத் தலம். அருணந்தி சிவாசாரியார் அவதாரத்தலம்
இறைவன் : சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்
இறைவி : சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருத்துறையூர் & அஞ்சல் – 607 205 பண்ருட்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04142-248498, 9444807393

இருப்பிட வரைபடம்


மலையார் அருவித்திரள் மாமணி யுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர் ஆடுந்துறையூர்த்
தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே. 
				-  சுந்தரர்
பாடல் கேளுங்கள்
  மலையார் அருவித்திரள்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க