திருச்சோபுரம் ( தியாகவல்லி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 164 கி.மீ., கடலூர் - சிதம்பரம் சாலையில் 20 ஆவது கி.மீ.ல் இடப்பக்கம் செல்லும் சாலையில் திரும்பி 3 கி.மீ. சென்றால் கோயில். அல்லது மேட்டுப்பாளையம் என்னும் ஊர் வந்து தியாகவல்லி செல்லும் பேருந்து மூலமாக செல்லும் சாலையில் 5 கி.மீ. சென்றால் கோயில். சென்னையிலிருந்து 206 கி.மீ. திருச்சியிலிருந்து 207 கி.மீ. மதுரையிலிருந்து 367 கி.மீ.
வரிசை எண் : 38
சிறப்பு : திரிபுவனச் சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி இக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தமையால் தியாகவல்லி என்ற பெயர் உண்டாயிற்று
இறைவன் : மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்
இறைவி : தியாகவல்லியம்மை, சத்யதாட்சி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : சோபுர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம், தியாகவல்லி அஞ்சல் – 608 801, கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.30 – 11.00 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : திரு.மூர்த்தி : 9442936922

இருப்பிட வரைபடம்


நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேன் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே..
		- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 நாற்றமிக்க கொன்றை


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க