புறவார்பனங்காட்டூர் (பனையபுரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 108 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து செல்லும்போது திண்டிவனம் தாண்டி விழுப்புரம் புறவழிச்சாலையில் நுழைந்து 2 கி.மீ. சென்றால் கோயில். பண்ருட்டியிலிருந்து (கோலியனூர் வழி) 27 கி.மீ., சென்னையிலிருந்து 148 கி.மீ. திருச்சியிலிருந்து 157 கி.மீ. மதுரையிலிருந்து 287 கி.மீ.
வரிசை எண் : 52
சிறப்பு : சூரியன் வழிபட்ட தலம். சித்திரை மாதம் முதல் 7 நாட்கள் சூரிய ஒளி சுவாமியின் மீதும் அம்பாள் மீதும் படும். இத் தலத்தில் நாயன்மார் திருமேனிகள் வரிசையில் திருநீலகண்டர் தம் மனைவியுடன் இருவரும் தண்டு பிடித்தவாறே நிற்கும் காட்சி அற்புதமானது. வேறெங்கும் காண இயலாது.
இறைவன் : பனங்காட்டீஸ்வரர்
இறைவி : புறவம்மை, சத்யாம்பிகை
தலமரம் : பனை
தீர்த்தம் : பத்ம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் & அஞ்சல் – 605 603 (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 9444897861

இருப்பிட வரைபடம்


விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.
			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
  விண்ண மர்ந்தன


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க