பெண்ணாகடம் (பெண்ணாடம்) (தூங்கானைமாடம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 195 கி.மீ., விருத்தாசலம் சென்று அங்கிருந்து தொழுதூர் செல்லும் சாலையில் 17 கி. மீ. சென்றால் சாலை ஓரத்தில் கோயில். கொடிக்களத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி வரும்போது 5 ஆவது கி.மீ.ல் கோயில். சென்னையிலிருந்து 238 கி.மீ. திருச்சியிலிருந்து 140 கி.மீ. மதுரையிலிருந்து 263 கி.மீ.
வரிசை எண் : 34
சிறப்பு : திருநாவுக்கரசருக்கு இறைவன் சூலக்குறியும் இடபக்குறியும் தோளில் பொறித்த தலம். தேவ மகளிர் (பெண்), பசு (ஆ), யானை (கடம்) வழிபட்ட தலம். கடந்தை என்ற பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு. கலிக்கம்ப நாயனாரின் முத்தித் தலம். மெய்கண்டநாயனாரின் அவதாரத்தலம். மலைக் கோயில் ஒன்று உள்ளே உண்டு. அங்கே இருக்கும் ஈஸ்வரர் சௌந்தரேஸ்வரர்.
இறைவன் : சுடர்க்கொழுந்தீசர், பிரளயகாலேஸ்வரர்
இறைவி : ஆமோதனம்மாள், கடந்தைநாயகி, அழகிய காதலி
தலமரம் : செண்பகம்
தீர்த்தம் : கயிலை தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் & அஞ்சல், திட்டக்குடி வட்டம், (வழி) விருத்தாசலம், கடலூர் மாவட்டம் – 606 105
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.30 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04143-222788

இருப்பிட வரைபடம்



பொன்னார் திருவடிக்கு ஒன்றுஉ ண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இருங்கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலம் என் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.
						- அப்பர்
பாடல் கேளுங்கள்
  பொன்னார் திருவடிக்கு


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க