அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 162 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 40 கி.மீ. திருவண்ணாமலையிலிருந்து 33 கி.மீ., திருக்கோயிலூரிலிருந்து 2 கி.மீ., சென்னையிலிருந்து 202 கி.மீ. திருச்சியிலிருந்து 192 கி.மீ. மதுரையிலிருந்து 332 கி.மீ.
வரிசை எண் : 44
சிறப்பு : அம்பாள் இரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு உத்தரவிட்ட தலம். இங்கிருக்கும் விநாயகர் எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருக்கும். கோயில் சற்று மேடான மலை மீது உள்ளது.
இறைவன் : அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர்
இறைவி : சௌந்தர்ய கனகாம்பிகை, அழகியபொன்னம்மை
தலமரம் : ----
தீர்த்தம் : பெண்ணையாறு
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அரகண்டநல்லூர் & அஞ்சல் – 605 752 திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 10.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 9965144849

இருப்பிட வரைபடம்


பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே. 
			-  சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
  பீடினாற் பெரியோர்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க