“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ” என்பார் நம் அப்பர் சுவாமிகள். இறைவன் ஓசையாகவும் ஒலியாகவும் இருக்கிறான். பண்ணில் ஓசையாக விளங்குகிறான். பாட்டினை விரும்பிக் கேட்கிறான். இறைவனுக்கு அருச்சனை பாட்டேயாகும் என்றனர். அதனால்தான் அவன் தோடுடைய செவியனானான். அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே என்றார் நம் அடிகள். இங்கே கீதம் என்றது திருமுறைகள். எனதுரை தனதுரை என்ற சம்பந்தர் வாக்கிற்கு இணங்க அவனே அருளிய திருமுறைகளில் சிலவற்றை வாகீசருடைய வரலாற்று அடிப்படையில் இவ் வளாகத்தில் (AUDIO) கேட்போம். துளையில்லாச் செவியராய் நாம் இருக்கலாமா? எனவே வாருங்கள் கேட்போம்.

பாடல் வரியின் மேல் mouse cursor-ஐ வைத்தால் அந்தப் பாடல் பாடப்பெற்ற வரலாற்றுச் சூழலை அறியலாம்


பாடல் கேளுங்கள்

கூற்றாயினவாறு தமக்கை திலகவதியார் வேண்ட,
இறைவன் அப்பர் சுவாமிகளுக்கு
சூலை நோய்கொடுத்து திருவதிகையில்
ஆட்கொண்டபோது
சுவாமிகள் அருளிய பாடல்

நாமார்க்கும் குடியல்லோம் சமணம் துறந்து சைவம் சார்ந்ததால்
கைது செய்ய வந்த பல்லவ மன்னனின்
வீரர்களை நோக்கி சுவாமிகள் பாடியருளியது

மாசில் வீணையும் மன்னன் தன்னை நீற்றறையில்
இட்டுக் கொடுமைப்படுத்தியபோது
சுவாமிகள் பாடியருளியது

துஞ்சிருள் காலை மன்னன் சுவாமிகளுக்கு பாற்சோற்றில்
நஞ்சைக் கலந்து ஊட்டியபோது
சுவாமிகள் பாடியருளியது

சுண்ணவெண் சந்தனச்சாந்தும் மன்னன் சுவாமிகளை யானையின்
காலால் இடறிக் கொல்ல
முற்பட்டபோது பாடியருளியது

சொற்றுணை வேதியன் மன்னன் சுவாமிகளை கல்லினோடுப்
பிணைத்துக் கடலில் எறிந்தபோது
பாடியருளியது

பொன்னார் திருவடிக்கு திருப்பெண்ணாகடம் என்னும் தலத்தில்
தன் தோளில் சூலக்குறி பொறிக்குமாறு
சுவாமிகள் வேண்டிப் பாடியருளியது

ஒன்றியிருந்து நினைமின்கள் திருத்தில்லையில் சுவாமிகள் பாடியருளியது

கோவாய் முடுகி திருச்சத்திமுற்றத்தில் சுவாமிகள்
தனக்குத் திருவடி தீட்சை அளிக்குமாறு
வேண்டிப் பாடியருளியது

ஒன்றுகொலாம் அவர் திங்களூரில் அரவம் தீண்டிய
அப்பூதியடிகளின் மகனை இப்பதிகம்
பாடி சுவாமிகள் இறையருளால் உயிர்ப்பித்தார்

பண்ணின் நேர் மொழியாள் திருமறைக்காட்டில் வேதங்கள் அடைத்த
திருக்கோயில் கதவினை சுவாமிகள்
இப்பதிகம் பாடித் திறப்பித்தார்

எங்கே என்னை இருந்திடம் இறைவன் கனவில் தோன்றி அழைக்க
திருவாய்மூர் சென்று பாடியருளியது்

கருவுற்ற நாள் முதலாக திருக்கச்சியேகம்பத்தில் (காஞ்சிபுரம்)
சுவாமிகள் பாடியருளியது்

வேற்றாகி விண்ணாகி திருக்கயிலையில் சுவாமிகள் பாடியருளியது்

மாதர்பிறைக் கண்ணியானை திருவையாற்றில் கயிலைக்காட்சியைக்
கண்டு் சுவாமிகள் பாடியருளியது்

எண்ணுகேன் என்சொல்லி திருப்புகலூரில் இப்பதிகம் பாடி
சுவாமிகள் இறைவனோடு
இரண்டறக் கலந்தார்